"ரூம் போட்டு இப்டிலாம் யோசிப்பாங்களோ?".. 'ஒரே நாளில் சர்ச்சை ஆன வைரல் சம்பவம்!'.. 'மன்னிப்பு கேட்ட ஃபுட்பால் அணி!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் கொரியாவின் சியோல் பகுதியில் நடந்த கால்பந்து போட்டித் தொடருக்கு ஆடியன்ஸ் இல்லாததால், கவர்ச்சியான பிளாஸ்டிக் பொம்மைகளை ரசிகைகளாக பயன்படுத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'கொரோனா' காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் கொரியாவின் 'கே-லீக்' கால்பந்து தொடர் கடந்த மே 8-ஆம் தேதி மீண்டும் துவங்கியது. இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் சியோலில் போட்டி நடந்தது. இதில் எப்.சி., சியோல் 1-0 என்ற கோல் கணக்கில் குவாங்ஜு எப்.சி., அணியை தோற்கடித்தது.
எனினும் இந்த போட்டியை காண்பதற்கு கொரோனா பரவல் தடுப்புக் காரணத்துக்காக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், இந்த போட்டியில் சியோல் அணி சார்பாக, ரசிகைகளைப் போல கவர்ச்சியான பெண்கள் உருவிலான பிளாஸ்டிக் பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த பொம்மைகள் பாலியல் பொம்மைகள் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுபற்றி ரசிகர் ஒருவர் பேசும்போது, “இது ஒரு சர்வதேச அவமானகரமான செயல், இப்படி ஒரு நூதன யோசனை இவர்களுக்கு எப்படித்தான் வந்ததோ?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் எப்.சி., சியோல் அணி தமது இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், போட்டியின் போது ரசிகைகளாக பயன்படுத்தப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொம்மைகளுக்கும்,
2016 K League winners FC Seoul inadvertently used sex dolls rather than fashion mannequins to help fill empty stands this weekend. The club has apologised. Both the club and the supplier are pointing fingers at others. (It's not just COVID-19 you need to avoid catching!) #kleague pic.twitter.com/59rSU8XxYL
— Devon Rowcliffe (@WhoAteTheSquid) May 17, 2020
பாலியல் பொம்மைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆரம்பம் முதலே உறுதிப்படுத்தி இருந்ததாகவும் எனினும் ரசிகர்களுக்கு இதனால் ஏற்பட்ட ஆழ்ந்த கவலைக்காக, உண்மையில் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.