'போட்றா வெடிய'... 'பிரபல கால்பந்து அணியுடன் மெஸ்ஸி ஒப்பந்தம்?'... 'சம்பளத்தை கேட்டா ஒரு நிமிஷம் ஷாக் ஆவிங்க'... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பத்திரிகையாளர் சந்திப்பில் லியோனல் மெஸ்ஸி கண்ணீர் சிந்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

'போட்றா வெடிய'... 'பிரபல கால்பந்து அணியுடன் மெஸ்ஸி ஒப்பந்தம்?'... 'சம்பளத்தை கேட்டா ஒரு நிமிஷம் ஷாக் ஆவிங்க'... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நிதி மற்றும் கட்டமைப்புத் தடைகள் காரணமாக மெஸ்ஸி மற்றும் பார்சிலோனா அணிக்கு இடையேயான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுகிறார் என்று பார்சிலோனா நிர்வாகம் அறிவித்தது கால்பந்து ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த பிரியாவிடை சந்திப்பில் பேசிய மெஸ்ஸி, ''அணியில் நீடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். என் தலையில் நிறைய விஷயங்கள் ஓடுகின்றன. இன்னும் பார்சிலோனா அணியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற யதார்த்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அணியிலிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன்.

Football superstar Lionel Messi reaches agreement on move to PSG

எனது சம்பளத்திலிருந்து 50% குறைத்துக் கொள்ளக்கூட நான் சம்மதித்தேன். நம் அனைவருக்கும் நல்ல காலமும் இருக்கும், கெட்ட காலமும் இருக்கும். ஆனால், எப்போதும் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மாறாது” என்று கண்ணீருடன் மெஸ்ஸி தெரிவித்தார். இந்நிலையில் அடுத்ததாக மெஸ்ஸி எந்த கிளப் அணிக்காக விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தீயாக எரிந்து கொண்டிருந்தது.

உலக கால்பந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அந்த வகையில் ''மெஸ்ஸி-PSG இடையேயான ஒப்பந்தம் இறுதியானதாகவும், ஒரு சீசனுக்கு 35 மில்லியன் யூரோ என இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக''  தகவல்கள் வெளியாகியுள்ளது.

Football superstar Lionel Messi reaches agreement on move to PSG

அதேபோன்று PSG உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னும் சில மணிநேரங்களில் மெஸ்ஸி பாரிஸ் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்