'ஒரு வழியாக பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி!!!'... 'தேதியுடன் முக்கிய தகவலை பகிர்ந்த தடுப்பூசி திட்டத்தின் தலைவர்!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் எப்போது தொடங்கும் என்பது குறித்து தடுப்பூசி திட்டத்தின் தலைவர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 1.25 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களில் 2.62 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகளை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் எப்போது முதல் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் தலைவர் மொன்செஃப் ஸ்லாவ், "அனுமதி பெற்ற 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி திட்ட தளங்களுக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். எனவே ஒப்புதல் பெற்ற பிறகு, தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி பெற அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரும் அதன் ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) விண்ணப்பித்துள்ள நிலையில், தடுப்பூசி ஒப்புதல் குறித்து விவாதிக்க எப்டிஏ ஆலோசனைக் குழு டிசம்பர் 8 முதல் 10 வரை சந்திக்க திட்டமிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்