கடந்த 100 வருசத்துல இப்படியொரு சாதனையை யாருமே பண்ணல.. நம்ம சென்னையில் ‘மாஸ்’ காட்டிய அஸ்வின்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களுக்கு 578 ரன்களை குவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை மூன்றாம் நாளான நேற்று விளையாடத் தொடங்கியது. அதில் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரஹானே ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இதனை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் புஜாரா 73 ரன்களிலும், ரிஷப் பந்த் 91 ரன்களிலும் எடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் கூட்டணி நிதனமான ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் அஸ்வின் 31 ரன்னில் அவுட்டாகினர்.
அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் வாசிங்டன் சுந்தர் 85 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். அப்போது இன்னிங்ஸில் முதல் ஓவரை அஸ்வின் வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடந்த 100 ஆண்டுகளில், டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
மற்ற செய்திகள்