கடைசி பந்தில் 5 ரன் வேணும்.. சிக்ஸ் போகல, நோ பாலும் போடல.. ஆனாலும் நடந்த அதிசயம்.. ஃபீல்டர் பெர்ஃபார்மன்ஸ் தான் ஹைலைட்டே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடைசி பந்தில், பேட்டிங் செய்த அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வேற லெவல் சம்பவம் ஒன்று நடந்து அந்த அணி வெற்றியும் பெற்றது.

கடைசி பந்தில் 5 ரன் வேணும்.. சிக்ஸ் போகல, நோ பாலும் போடல.. ஆனாலும் நடந்த அதிசயம்.. ஃபீல்டர் பெர்ஃபார்மன்ஸ் தான் ஹைலைட்டே

கிரிக்கெட் போட்டிகள் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதோ, அந்த அளவுக்கு அதில் வேடிக்கையான சம்பவங்களும் பல நடைபெறும்.

சமீபத்தில் கூட, டி 20 லீக் தொடர் ஒன்றில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரசல், மிகவும் வினோதமான முறையில்,  ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

வேடிக்கை சம்பவம்

இது தொடர்பான வீடியோக்கள் கூட, அதிகம் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியருந்தது. ரசலின் ரன் அவுட் வீடியோக்களைப் போல, நாம் பல வினோதமான  மற்றும் வேடிக்கையான நிகழ்வுகளை கிரிக்கெட் போட்டியில் பார்த்திருப்போம். இந்நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான், பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அரங்கேறியுள்ளது.

ஒரு பந்தில் 5 ரன்

'Al-Wakeel Cricket League' என்ற பெயரில், 20 ஓவர் லீக் போட்டித் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில், Audionic மற்றும் AutoMall ஆகிய இரு அணிகளும் மோதியுள்ளது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த Audionic அணி, 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய AutoMall அணிக்கு, கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்க, கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

வாய்ப்பை தவற விட்ட ஃபீல்டர்

சிக்ஸர் அடித்தால் மட்டுமே என்ற நிலை இருந்தது. இல்லை என்றால், பந்து வீச்சாளர் நோ பால் வீசினால் கூட, பேட்டிங் அணிக்கு வெற்றி பெற ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு டென்ஷன் நிறைந்த சூழலில், ஃபீல்டர் ஒருவரின் தவறால், வெற்றி வாய்ப்பை பவுலிங் செய்த அணி தவற விட்ட சம்பவம் நடந்துள்ளது.

அந்த கடைசி பந்தினை மிகவும் அற்புதமான ஒரு யார்க்கராக பந்து வீச்சாளர் வீச, பேட்ஸ்மேன் சந்தித்த அந்த பந்து, லாங் ஆப் திசையை நோக்கி சென்றது. அப்போது, அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற வீரர், பந்தினை பிடித்தார். இதனால், போட்டி முடிந்து விட்டது என்றே அனைவரும் கருதினர்.

fielder comedy of errors allow batting team to seal victory

என்ன ஃபீல்டர் இதெல்லாம்?

ஆனால், அந்த ஃபீல்டரோ, பந்தினை எறியாமல், நேராக ஸ்டம்பை நோக்கி வேகமாக ஓடி வந்தார். தொடர்ந்து, பவுலிங் சைடு ஸ்டம்பிலும் அடித்தார். அப்போது, பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் தான் இருந்தார். ஆனால், அந்த ஃபீல்டர் ஸ்டம்பில் அடித்ததும், இரண்டு பேட்ஸ்மேன்களும் ரன் ஓட ஆரம்பித்தனர். அந்த சமயத்தில், பந்தினை கீப்பர் கைக்கு வீசாத அதே வீரர், பந்துடன் ஸ்டம்பை நோக்கி ஓடினார். பிறகு, அருகே சென்றதும் ஸ்டம்பில் பந்தினை அடிக்காமல், ரன் அவுட் செய்வதற்கு வேண்டி வேகமாக வீச, அது ஸ்டம்பில் படாமல், கீப்பரையும் தாண்டி சென்றது.

பேட்டிங் டீம் வெற்றி

இறுதி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரே ஒரு பீல்டரின் தவறால், பேட்ஸ்மேன்கள் ரன்னை ஓடி எடுக்க, அவர்கள் அதிசயமாக வெற்றியும் பெற்றனர். சிக்ஸர் அல்லது பவுலர் நோ பால் வீசினால் தான், பேட்டிங் செய்யும் அணியால் வெற்றி பெற முடியும் என்ற கடினமான சூழலில், ஃபீல்டர் செய்த மோசமான தவறால், பேட்டிங் அணி, யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது.

இது தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், அதிகம் வைரலாகி வருகிறது.

PAKISTAN CRICKET, FIELDING, VIRAL VIDEO

மற்ற செய்திகள்