'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய பெண் ஒருவர், லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்குள் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.
இதனிடையே போட்டியின் நடுவே பெண் ஒருவர் ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்தில் ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி போட்டியானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது மைதானத்தில் ஓட முயன்ற பெண்ணின் செயல் அங்கிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. உடனடியாக மைதானத்திற்குள் வந்த காவலர்கள் அந்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.
இதனிடையே கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு இணையதளத்தை பிரபலப்படுத்த, இது போன்று அத்துமீறிய சம்பவம் நடைபெற்றது. கடந்தமுறை இதுபோன்று நடந்த சம்பவத்தில், அந்த ஆபாச இணையதளத்தை இயக்கும் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் பெண் நண்பர் ஆபாச உடையில் மைதானத்தில் ஓடினார்.
ஆனால் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியின் போது அவரின் தாய் தனது மகனின் ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இதை விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திள்ளார்.
Streaker advertising adult website that crashed Champions League and Copa America finals tries the same trick at the Cricket World Cup... but a quick-thinking steward foils her plans https://t.co/THWyKmOYCq pic.twitter.com/o40QxSRFRl
— MailOnline Sport (@MailSport) July 14, 2019