நான் மட்டும் ‘தனியா’ இருந்தேன்.. அந்த டைம் ரொம்ப ‘கஷ்டமா’ இருந்துச்சு.. ‘உருக்கமாக’ பேசிய ருதுராஜ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து சென்னை அணியின் இளம்வீரர் ருதுராய் கெய்க்வாட் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களை எடுத்தார்.
இதனை அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், ‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அணிக்கு வெற்றியை தேடி தருவதே என்னுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. அதனால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அமீரகம் வந்தபோது நான் மட்டுமே கொரோனா காரணமாக அதிக நாட்கள் தனிமையில் இருந்தேன். அது மிகவும் கடினமான நாட்கள்.
அணியில் ஒவ்வொருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். நிச்சயம் ஏதோ ஒரு ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடுவேன் என நினைத்தேன். அது இன்று நடந்தது. பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. ஆனாலும் சரியான கேப்களில் என்னால் பவுண்டரி அடிக்க முடிந்தது. அதேபோல எந்த பவுலரின் பந்தை விளாச வேண்டும், விளாசக் கூடாது என கவனமாக இருந்தேன்’ என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்