ஒரே ஒரு சம்பவம்.. இளம் வீரரை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்.. வைரலாகும் முன்னாள் CSK வீரர் சொன்ன அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியின் போது கேட்சை தவறவிட்ட ராஜஸ்தான் வீரர் ரியான் பராக்கை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு சம்பவம்.. இளம் வீரரை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்.. வைரலாகும் முன்னாள் CSK வீரர் சொன்ன அட்வைஸ்..!

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூழலில் இன்று (27.05.2022) அகமதாபாத் மைதானத்தில் பிளே ஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா மற்றும் ஓபேட் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியின் முக்கியமான கட்டத்தில், பெங்களூரு அணியின் இளம் வீரர் ரஜத் படிதார் அடித்த பந்தை ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் கேட்ச் பிடிக்க தவறினார். அப்போது ரஜத் படிதார் 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதனை அடுத்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் ரியான் பராக் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

முன்னதாக நடந்த போட்டி ஒன்றில் கேட்ச் பிடித்து விட்டு அம்பயரை கிண்டல் செய்வது போல் ரியான் பராக் சைகை செய்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அப்போது பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் ரியான் பராக்கிற்கு அறிவுரை வழங்கி இருந்தார். அதில், ‘இளம் வீரரே உங்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். நீங்கள் செய்யும் செயல் மீண்டும் உங்களுக்கு சீக்கிரமாக திரும்பி வரும்’ என கூறியிருந்தார். இதனை தற்போது மேற்கொள்காட்டி ரசிகர்கள் பலரும் ரியான் பராக்கை விமர்சனம் செய்து வருகின்றனர்.

IPL, RIYANPARAG, RAJATPATIDAR, RRVRCB

மற்ற செய்திகள்