‘அவர் சிக்ஸ் அடிச்சதுக்கும், இவர் ஐபிஎல்-ல் இருந்து விலகுனதுக்கும் என்னய்யா சம்பந்தம்?’.. கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரிலில் இருந்து விலகியதை புஜார அடித்த சிக்சருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஏப்ர்ல் 9-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், வலைப்பயிற்சியின் போது இந்திய வீரர் புஜாரா சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விளையாட தேர்வு செய்யப்படும் புஜாரா, இந்தாண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். புஜாராவை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தற்காக மற்ற அணி நிர்வாகிகள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஐபிஎல் தொடர்களில் பெரிதும் சோபிக்காததால், கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனை அடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் புஜாரா விளையாட உள்ளார்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி, புஜாரா குறித்து கூறுகையில், ‘டெஸ்ட் போட்டிகளில் அவர் படைத்த சாதனைகளுக்கு கவுரப்படுத்தவே புஜாராவை ஐபிஎல் தொடரருக்கான சென்னை அணியில் தேர்வு செய்தோம். சமீபத்திய போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளும் இந்தியாவுக்காக அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. ஒரு வீரர் தனது வியர்வையையும், இரத்தத்தையும் நாட்டிற்குக் கொடுப்பதாக உணர்கிறேன். நான் அவரை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்’ என கூறியுள்ளார்.
இந்த நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறி சிஎஸ்கேவில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கூறினார். இதனை அடுத்து இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் புஜாரா அடித்த சிக்சரைப் பார்த்துதான் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறும்பாக பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது புஜாராவை அவுட்டாக்க முடியாமல் ஜோஷ் ஹேசில்வுட் நொந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hazelwood pulls out of ipl after seeing bowlers getting belted by Pujara in nets @cheteshwar1 https://t.co/mRAhiDV8sR
— Dilip Vasu (@vdilipprabath) April 1, 2021
Josh Hazlewood withdrawing from Chennai makes Chennai poorer for sure given he is one of the world's premier fast bowlers. However, my sneaky suspicion is that he couldn't stand another month bowling to Pujara in the nets. #IPL2021
— Abhishek Singhvi (@DrAMSinghvi) April 1, 2021
Hazelwood was tired by bowling to Pujara in Australia tour.
— Mayursinh Jadeja🇮🇳 (@jadejamayur010) April 1, 2021
This is what happens when you see Pujara batting in nets 😂😂
— Aryan 🐼 (@aryannjaiswall) April 1, 2021
மற்ற செய்திகள்