கால்பந்து மைதானத்திற்குள் பொம்மைகளை தூக்கி எறிந்த ரசிகர்கள்.. 4 நிமிடம் நின்ற போட்டி.. மனம் நெகிழ வைக்கும் காரணம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

கால்பந்து மைதானத்திற்குள் பொம்மைகளை தூக்கி எறிந்த ரசிகர்கள்.. 4 நிமிடம் நின்ற போட்டி.. மனம் நெகிழ வைக்கும் காரணம்!!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மனைவி வெச்ச மீன் குழம்பு ஃபேவ்ரைட்.. அப்றம்"... முதல்வர் ஸ்டாலின் சொல்லும் டயட் சீக்ரெட்ஸ்.. EXCLUSIVE

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சூழ்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை இன்னும் பீதியில் ஆழ்த்தி இருந்தது.

அதே போல பல கட்டிடங்கள் சுக்கு நூறாகி இடிபாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி இருந்தனர். துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீட்பு பணிகளுக்காகவும், நிவாரண உதவிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Fans throw toys in football stadium for children in turkey

Images are subject to © copyright to their respective owners.

சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்த சூழ்நிலையில் அவ்வப்போது இடிபாடுகளில் சிக்கி இருக்கும் நபர்களை பல நாட்கள் கழித்து ஆச்சரியத்துடன் மீட்பது குறித்த செய்திகளும் அவ்வபோது இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது. அதே போல இந்த நிலநடுக்கம் காரணமாக, மொத்தம் 16 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் தரைமட்டமாகி உள்ளதாகவும் தகவல்கள் கூறும் நிலையில், இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துருக்கியின் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நடுவே நடந்த சம்பவம் ஒன்று பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. துருக்கியின் Antalyaspor மற்றும் Besiktas ஆகிய அணிகளுக்கு இடையே சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது அங்கே போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள், சிறிய சைஸ் முதல் பெரிய சைஸ் வரையிலான பல்வேறு பொம்மைகளை நிலநடுக்கத்துக்கு நடுவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அளிக்கும் வகையில் மைதானங்களில் வீசி இருந்தனர்.

Fans throw toys in football stadium for children in turkey

Images are subject to © copyright to their respective owners.

இந்த சம்பவம் பலரையும் மனம் நெகிழ வைத்த சூழலில் கால்பந்து போட்டி சுமார் நான்கு நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கிருந்த பொம்மைகள் அனைத்தையும் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் சேகரிக்கவும் செய்திருந்தனர்.

Also Read | "இனிய நண்பர் ஸ்டாலினுக்கு"... அட்வான்ஸாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!!

FANS, TOYS, FOOTBALL STADIUM, CHILDREN, TURKEY

மற்ற செய்திகள்