என்ன பாத்தா ‘அப்டி’ சொன்னீங்க.. ஜடேஜா கொடுத்த ‘தரமான’ பதிலடி.. சீண்டிய முன்னாள் வீரரை ‘வச்சு’ செய்யும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

என்ன பாத்தா ‘அப்டி’ சொன்னீங்க.. ஜடேஜா கொடுத்த ‘தரமான’ பதிலடி.. சீண்டிய முன்னாள் வீரரை ‘வச்சு’ செய்யும் ரசிகர்கள்..!

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 87 ரன்கள் அடித்தார்.

Fans slams Sanjay Manjrekar for his tweet about Jadeja

சென்னை அணியை பொருத்தவரை லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளும், மிட்சல் சான்ட்னர், ஜடேஜா, கரன் ஷர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

Fans slams Sanjay Manjrekar for his tweet about Jadeja

இதில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 38 ரன்களில் அவுட்டாக, கேப்டன் தோனி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, சாம் குர்ரன் கூட்டணி அணியின் வெற்றி பொறுப்பை கையில் எடுத்தது.

Fans slams Sanjay Manjrekar for his tweet about Jadeja

கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது களத்தில் நின்ற ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜடேஜா, அடுத்த 7 பந்துகளில் 28 ரன்கள் விளாசி தள்ளினார்.

Fans slams Sanjay Manjrekar for his tweet about Jadeja

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியானது. அதில் ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனை குறிப்பிட்டு ‘T20 போட்டிக்கு ஜடேஜா சரியாக இருக்கமாட்டார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேலை எடுத்திருக்கலாம்’ என ரசிகர் ஒருவர் ட்விட்டர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ‘முழுவதுமாக ஒத்துக்கொள்கிறேன்’ என பதிலளித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியின் விழிம்பில் இருந்த சென்னை அணியை ஜடேஜா தனது சிக்ஸர்கள் மூலம் மீட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்ரேக்கருக்கு ஜடேஜா தனது பேட்டின் மூலமே பதில் சொல்லியுள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக உலகக்கோப்பை தொடரின் போதும் இதேபோல் வம்பிழுத்த மஞ்ரேக்கரை ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்