"இப்டி மாஸா ஜெயிச்சு, 'கம்பேக்' மட்டும் குடுத்தா போதுமா??.." அந்த ஒரு 'விஷயத்த' எப்போ சரி பண்ண போறீங்க??.. 'பஞ்சாப்' வெற்றி பெற்றும் கடுப்பான 'ரசிகர்கள்'!!.. நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

"இப்டி மாஸா ஜெயிச்சு, 'கம்பேக்' மட்டும் குடுத்தா போதுமா??.." அந்த ஒரு 'விஷயத்த' எப்போ சரி பண்ண போறீங்க??.. 'பஞ்சாப்' வெற்றி பெற்றும் கடுப்பான 'ரசிகர்கள்'!!.. நடந்தது என்ன??

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பஞ்சாப் கேப்டன் ராகுல் 91 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், பெங்களூர் அணியால் 145 ரன்களே எடுக்க முடிந்ததால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இதற்கு முன்பாக 6 போட்டிகள் ஆடியிருந்த பஞ்சாப் அணி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டிருந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிராக இன்று பெற்ற வெற்றி, பஞ்சாப் அணிக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும், அந்த அணியில் முக்கியமான வீரர் ஒருவர், தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது, சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) இதுவரை 7 போட்டிகளில் ஆடி, 28 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிலும், 4 போட்டிகளில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகியுள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும், அவர் டக் அவுட்டானார்.

இதனால், அவரது பேட்டிங்கை ரசிகர்கள் அதிகம் கிண்டல் செய்து வருகின்றனர். பஞ்சாப் அணியில் டி 20 கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரரான டேவிட் மலான் (David Malan) இருந்த போதும், அவருக்கு இதுவரை ஒருமுறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

இதனால், இனி வரும் போட்டிகளிலாவது பூரனுக்கு பதிலாக, மலானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தியாவில், கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்திலுள்ள நிலையில், தனது ஐபிஎல் வருமானத்தின் ஒரு பகுதியை, இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக அளிக்கவுள்ளதாக, பூரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்