RRR Others USA

மேட்ச் தோத்ததும் KL ராகுல் போட்ட ட்வீட்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன இருக்கு அதுல..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பதிவிட்ட ட்விட் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

மேட்ச் தோத்ததும் KL ராகுல் போட்ட ட்வீட்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன இருக்கு அதுல..?

ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட் செய்த இந்திய அணி 19.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தோல்வியடைந்த பின் கே.எல்.ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்திருந்தார். அதில், ‘இந்த தோல்வி வெற்றி போல தான் உள்ளது. ஏனென்றால் நாம் அவ்வாறு போராடியிருக்கிறோம். பெருமையாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதற்கு காரணம், போட்டியின் கடைசி கட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீசி கே.எல்.ராகுல் அழைத்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுபோன்ற சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு கொடுத்திருந்தால் லக்னோ அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளது என பலரும் கருத்து தெரிவித்தனர். அதனால்தான் கே.எல்.ராகுலை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கே.எல்.ராகுல் அவுட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

KLRAHUL, IPL, LSG

மற்ற செய்திகள்