என்னங்க சொல்றீங்க? ‘செம’ ஷாக்கான ரோகித் சர்மா.. சர்ச்சையை கிளப்பிய 3rd அம்பயர் முடிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 56-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா 43 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியை பொறுத்தவரை பும்ரா 5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டுகளும், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியார் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டிம் சவுத்தி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் கடைசி பந்து சற்று ஷார்ட் லென்த் டெலிவரியாக போடப்பட்டது. இதை ரோகித் சர்மா லெக் சைட் திசையில் அடிக்க முயன்றார்.
ஆனால் பேட்டில் பந்து சரியாக படாததால், விக்கெட் கீப்பரிடம் சென்றது. உடனே விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன், பேட்டில் எட்ஜானதாக கூறி அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால் கள அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதனை அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் அம்பயரிடம் ரிவ்யூ கேட்டார்.
இதனை அடுத்து ரீப்ளே செய்து பார்த்த போது, பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாகவே கால் பேடில் பட்டது போன்று அல்ட்ரா எட்ஜில் தெரியவந்தது. இதனால் மும்பை ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்படி மூன்றாம் அம்பயர் அவுட் என அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித் சர்மா வேகமாக பெவிலியன் திரும்பினார். இதனால் மூன்றாம் அம்பயரின் முடிவு குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இப்போட்டியில் 113 ரன்களுக்கு மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Feel for you Rohit Sharma 💔 pic.twitter.com/lcZcuoxqnp
— Asha (@ashaa_45) May 9, 2022
Clearly a technical glitch. Spike popped up before the ball reached Rohit's bat. Important for the third umpire to keep the eyes open. #IPL2022 #MIvKKR pic.twitter.com/hfsfMvPb1m
— Subhayan Chakraborty (@CricSubhayan) May 9, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்