என்னது அவர் இறந்துட்டாரா..! ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்.. கடைசியில் தெரியவந்த உண்மை.. ‘இப்படியா பண்ணுவீங்க’.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி ஆல்ரவுண்டரான கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme), கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 35 வயதாகும் கொலின் டி கிராண்ட்ஹோம், தற்போது நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவர் விளையாட்டில் மட்டுமல்லாமல் அடிக்கடி தனது கெட்டப்பை மாற்றி கவனம் ஈர்ப்பவர். சமீப காலமாக நீண்ட முடியுடன் கொலின் டி கிராண்ட்ஹோம் வலம் வந்தார். இதனிடையே நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட இடம்பெற்றுள்ள கொலின் டி கிராண்ட்ஹோம், திடீரென மொட்டை அடித்துவிட்டார்.
இந்த புகைப்படங்களை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதுமட்டுமல்லாமல், பிரேக்கிங் நியூஸ் எனக் குறிப்பிட்டு, ‘மிகவும் பிரபலமான காலின் டி கிராண்ட் ஹோமின் முல்லட் மறைந்தது’ என சோகமான எமோஜியை பதிவிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கொலின் டி கிராண்ட்ஹோம் இறந்துவிட்டார் என அவருக்கு இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் உண்மையில் ‘முல்லட்’ (Mullet) என்பது கொலின் டி கிராண்ட்ஹோமின் ஹேர் ஸ்டைலின் பெயர். அதனால் அவரது முடியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். ஆனால் ரசிகர்களிடையே இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.
🚨 BREAKING NEWS 🚨
The famous Colin de Grandhomme mullet is no more 😔 #PAKvNZ #CricketNation pic.twitter.com/cRuIo9fX7v
— BLACKCAPS (@BLACKCAPS) September 14, 2021
இதனை அடுத்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை அறிந்த கொலின் டி கிராண்ட்ஹோமும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Life is so unpredictable 💔
— Harish Gupta (@harish__333) September 14, 2021
Too sooon.
Life is cruel 😭
R.I.P 💔
— 𝓐𝓷𝓫𝓾 ʙᴇᴀsᴛ🐾🕊️ (@Anbu__dr) September 14, 2021
மற்ற செய்திகள்