"பாவம் யா அந்த 'மனுஷன்'... இப்போ ரொம்ப ஒடஞ்சு போயிருப்பாரு..." 'இந்திய' வீரரை நினைத்து வருந்திய 'ரசிகர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று துவங்கியது.

"பாவம் யா அந்த 'மனுஷன்'... இப்போ ரொம்ப ஒடஞ்சு போயிருப்பாரு..." 'இந்திய' வீரரை நினைத்து வருந்திய 'ரசிகர்கள்'!!!

இந்திய அணியில் பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இன்றைய போட்டியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினர். இன்று இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பந்து வீச்சாளர்கள் அனைவரும் அதிக அனுபவமில்லாத வீரர்களாவர்.

இந்நிலையில், பிரபல சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறாமல் போனதற்கு சில முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இறுதியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கிய குல்தீப் யாதவ், அதிக விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார்.

இந்திய அணியின் மிகச் சிறந்த பவுலராக குல்தீப் யாதவ் வலம் வந்த நிலையில், அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை. இதனையடுத்து, இன்றுள்ள இந்திய அணியில் அதிக அனுபவமில்லாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்த போதும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது அவருக்கே மிகப் பெரிய ஏமாற்றமும், அதே நேரத்தில் வியப்பாகவும் இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

அஜித் அகர்கர் மட்டுமில்லாது, இந்திய வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே உட்பட பல கிரிக்கெட் ரசிகர்கள் குல்தீப் யாதவின் இந்த நிலைக்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்