இதனாலதான் எல்லாருக்கும் இவரை பிடிக்குது.. மேட்ச் தோத்தாலும்.. ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘சின்ன தல’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜிவா தோனியின் செயலைப் பார்த்து சுரேஷ் ரெய்னா ரசித்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் (IPL) தொடரின் 53-வது லீக் போட்டி இன்று (07.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டு பிளசிஸ் 76 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்துக்கு பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியின் நடுவே சிஎஸ்கே கேப்டன் தோனியின் மகள் ஜிவா தோனி (Ziva Dhoni) உற்சாகமாக நடனமாடினார். இதை டக் அவுட்டில் அமர்ந்திருந்த சுரேஷ் ரெய்னா (Suresh Raina) ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
— Cricketto™ (@Cricketto2) October 7, 2021
Chinna thala's reaction when ziva was dancing 💛#WhistlePodu #yellove pic.twitter.com/Fqu0WHhwNK
— Nemi ! The BADRIan (@NemiGulati) October 7, 2021
Chinna thala smiling at the beauty of happiness from Ziva #Yellove #MSDhoni pic.twitter.com/EBEMyNObfC
— Dhoni Raina 7 💛✨ (@ShivaDhonifan7) October 7, 2021
காயம் காரணமாக ஓய்வில் உள்ள சுரேஷ் ரெய்னா, முன்னதாக நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அதேபோல் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் ரெய்னா இடம்பெறவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா விளையாடினார்.
No Raina No Ipl No win.🥰#SureshRaina #raina pic.twitter.com/Tl7JJRANA5
— 🇮🇳🚩Parbat 🚩🇮🇳 (@pawanparbat) October 7, 2021
We need your presence in team and smile , hurting me so much man @ImRaina #Raina pic.twitter.com/BFoNFNsvaj
— Dhoni Raina 7 💛✨ (@ShivaDhonifan7) October 7, 2021
ஆனால் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ராபின் உத்தப்பா வெளியேறினார். மேலும் அப்போட்டிகளில் சென்னை அணியும் தோல்வியை தழுவியது. இதுபோன்ற சமயங்களில் சுரேஷ் ரெய்னாவை மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்