“ABD.. ABD..”-னு கத்திய ரசிகர்கள்.. உடனே கோலி பண்ண விஷயம்.. மனுசன் எப்பவுமே ‘வேறலெவல்’ தாங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் பெயரை ரசிகர்கள் கத்தியதும் விராட் கோலி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ABD.. ABD..”-னு கத்திய ரசிகர்கள்.. உடனே கோலி பண்ண விஷயம்.. மனுசன் எப்பவுமே ‘வேறலெவல்’ தாங்க..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 252 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதேபோல் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 208 ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது ரசிகர்கள் ‘ஏபிடி.. ஏபிடி..’ என தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பெயரை கத்தினர். உடனே விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ் போல் பேட்டிங் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Fans chanted ABD during pink-ball Test, Virat Kohli responded

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக ஏபி டிவில்லியர்ஸ் விளையாடியுள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஏபி டிவில்லியர்ஸுக்கு அந்த அணியில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, RCB, INDVSL, ABD, FANS

மற்ற செய்திகள்