VIDEO: கடைசியில ‘அஸ்வின்’ கிட்டையும் அதை கேட்டாச்சா.. சேப்பாக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசேப்பாக்கம் மைதானத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. இதில் 286 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அதிகபட்சமாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 106 ரன்கள் அடித்து அசத்தினார். முன்னதாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது அஸ்வின் 5 விக்கெட் எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
#Valimai Update Wait Goes To Chepauk Stadium 🏟️ Last Time Moeen Ali , This Time Namma @ashwinravi99 Anna ...
Dear @BoneyKapoor Make It Happen 🙏 #ValimaiUpdate pic.twitter.com/uHmvSjdEcA
— THALA FANS COMMUNITY (@TFCTeamPage) February 15, 2021
இந்த நிலையில் பவுண்டரில் லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஸ்வினிடம், ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டார். முன்னதாக இங்கிலாந்து வீரர் மொயில் அலியிடமும் இதேபோல் ரசிகர்கள் கேட்டனர்.
Wanakam. Humbled by your love towards our film “Valimai”. Bear with us as we work on presenting the First look soon. It’s in the best interests of the film. #Valimai #ValimaiUpdate #AjithKumar
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2021
இதனிடையே வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்