"கோலி இத செஞ்ச முடிக்குற வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.." பேனர் ஏந்திய ரசிகைகள்.. இதான் இப்போ செம 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஆடி வரும் ராஜஸ்தான் அணி, தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக, 68 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்த ஆர்சிபி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்திருந்தது.
68 ரன்களில் ஆல் அவுட்..
அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. தற்போதைய ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான பெங்களூர், இந்த போட்டியில் மோசமாக ஆடி இருந்தது, அந்த அணியை சுற்றி அதிக விமர்சனத்தினை உண்டு பண்ணி இருந்தது.
மீண்டும் ஃபார்முக்கு வரும் கோலி?
இது ஒரு புறம் இருக்க, ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து கோல்டன் டக்கில் அவுட்டாகி இருந்தார். அதே போல, இதுவரை 8 போட்டிகள் ஆடியுள்ள கோலி, 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், ஒரு அரை சதம் கூட இந்த முறை அடிக்கவில்லை. இதுவரை 3 ஆவது வீரராக களமிறங்கி வந்த கோலி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில், தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக டு பிளெஸ்ஸிஸ் அறிவித்திருந்தார்.
71 ஆவது சதத்துக்கு ஊரே வெயிட்டிங்..
இதனால், நிச்சயம் அவர் இன்று கம்பேக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் ஆவலில் உள்ளனர். இந்நிலையில், கோலி தொடர்பாக ரசிகைகள் கொண்டு வந்த பேனர்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, சர்வதேச போட்டிகளில் சிறந்ததாக ஆடினாலும், ஒரே ஒரு குறை மட்டும் ரசிகர்களை அதிகம் வாட்டி வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வருகிறார் கோலி. ஒட்டுமொத்தமாக 70 சதங்கள் அடித்துள்ள கோலி, 71 ஆவது சதத்துக்கு வேண்டி, பல தொடர்களாக காத்திருந்து வருகிறார். ஒவ்வொரு தொடரின் போதும், கோலி சதமடிப்பார் என ரசிகர்களும் காத்திருந்து வருகின்றனர்.
ரசிகைகள் கொண்டு வந்த பேனர்..
ஆனால், 50 ரன்களுக்கு மேல் அடிக்கும் கோலி, அதனை சதமாக மாற்றத் தவறி வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், ரசிகைகள் சிலர், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, கொண்டு வந்த பேனர்கள், அதிகம் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர்கள் கொண்டு வந்த பேனர்களில், விராட் கோலி 71 ஆவது சதத்தை அடிக்கும் வரை, நாங்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இது போன்று பலரும் விராட் கோலிக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில், விரைவில் தன்னுடைய 71 ஆவது சதத்தை பூர்த்தி செய்வார் என ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்