மைதானத்தில் காணாம போன பந்து.. கொஞ்ச நேரத்தில் ரசிகர் செஞ்ச விஷயம்.. சுப்மன் கில் ரியாக்ஷனை பார்க்கணுமே!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மைதானத்தில் காணாம போன பந்து.. கொஞ்ச நேரத்தில் ரசிகர் செஞ்ச விஷயம்.. சுப்மன் கில் ரியாக்ஷனை பார்க்கணுமே!!

                                                      Images are subject to © copyright to their respective owners

முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த சூழலில், 3 ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்து.அசத்த, முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார்.

விறுவிறுப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட்

தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ரோஹித் ஷர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்த சூழலில், தொடக்க வீரர் சுப்மன் கில் 50 ரன்கள் கடந்து சிறப்பாக ஆடியும் வருகிறார். 3 ஆவது நாள் ஆட்டம் நடந்து வருவதால் இந்த போட்டயில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners

ரசிகரின் விடாமுயற்சி

இதனிடையே, இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் நடந்த சம்பவம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. இரண்டாவது நாளின் கடைசி ஓவரை ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் வீசி இருந்தார். இந்த ஓவரில், அதிரடியாக சிக்ஸ் ஒன்றை இந்திய வீரர் சுப்மன் கில் லாங் ஆன் திசையில் பறக்க விட்டிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

அப்போது அவர் அடித்த பந்து, சைட் ஸ்க்ரீனில் இருந்த வெள்ளை துணிகளுக்கு உள்ளே சென்று விழுந்தது. இதனால், ரசிகர்களால் கூட பந்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. அடுத்த பந்தை கொண்டு வருமாறு 3 ஆவது நடுவருக்கு கள நடுவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.

புன்னகைத்த சுப்மன் கில்

ஆனால், அதே வேளையில் அங்கிருந்த ரசிகர் ஒருவர், வெள்ளைத் திரையில் பந்தை தேடி கொண்டிருந்தார். முதல் சில தேடுதலில் அந்த பந்து கிடைக்கவில்லை என்ற சூழலில், களத்தில் இருந்த நடுவர்களுக்கும் பின்னர் பந்தை கண்டதாக சிக்னல் கொடுத்தார் அந்த ரசிகர். இதற்கிடையே, வேறொரு புதிய பந்தையும் நடுவர்கள் எடுத்து கொடுத்ததாக கூறப்படும் சூழலில், ரசிகர் பந்தை கண்டுபிடித்து விட்டதால் அதனை எடுத்துக் கொடுக்கவும் நடுவர் சைகை கொடுத்தார்.

Images are subject to © copyright to their respective owners

மறுபக்கம் பந்தை எடுக்கவும் தாமதம் ஆனதால், நடுவர் அந்த ரசிகரை வெளியே வர சொல்ல, ஆனாலும் ரசிகர் விடாமுயற்சியுடன் தேடி பந்தை எடுத்து ஆரவாரம் செய்தது அங்கிருந்த சக ரசிகர்களையும் உற்சாகப்படுத்த வைத்தது. தொடர்ந்து பந்தை கொண்டு வரும் போது அவர் கீழே விழுந்தாலும் பந்தை பின்னர் மைதானத்தில் தூக்கி வீசினார்.

 

 

ரசிகர் ஒருவர் தீவிரமாக பந்தை தேடி எடுத்துக் கொடுத்ததும், இந்திய வீரர் சுப்மன் கில் உள்ளிட்டோர் அவரது செயலால் புன்னைகைத்தும் தற்போது அதிக வைரலாகி வருகிறது.

IND VS AUS, SHUBMAN GILL, FAN

மற்ற செய்திகள்