பயங்கரமான தோனி ரசிகரா இருப்பாரு போலயே.. ஆரத்தியெல்லாம் காட்டுறாரே.. யாரு சாமி நீ.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி ரசிகர் ஒருவர் டிவியில் தோனிக்கு ஆரத்தி எடுக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பயங்கரமான தோனி ரசிகரா இருப்பாரு போலயே.. ஆரத்தியெல்லாம் காட்டுறாரே.. யாரு சாமி நீ.. வீடியோ..!

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்த்து களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் தோனிக்கு ஆரத்தி எடுக்கிறார். இந்த வீடியோ DIPTI MSDIAN எனும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மைதானத்தில் டாஸ் போடும் வேளையில் தோனி பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த ரசிகர் தொலைக்காட்சிக்கு ஆரத்தி எடுக்கிறார் அவர். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

CSK, DHONI

மற்ற செய்திகள்