'இதுக்கு மேல தாங்க முடியாது'!.. 'தேறாத உடல் நிலை!.. இழந்த நினைவுகள் மீண்டும் வருமா'?.. சொந்த ஊருக்கு திரும்பும் டூ ப்ளசிஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டூ ப்ளசிஸ் பிஎஸ்எல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

'இதுக்கு மேல தாங்க முடியாது'!.. 'தேறாத உடல் நிலை!.. இழந்த நினைவுகள் மீண்டும் வருமா'?.. சொந்த ஊருக்கு திரும்பும் டூ ப்ளசிஸ்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் மோதிய 19வது லீக் போட்டியில் டூ ப்ளசிஸுக்கு விபத்து ஏற்பட்டது.  

முதல் இன்னிங்சின் 7 வது ஓவரின் போது, பெஷாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது ஃபீல்டிங்கில் இருந்த கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூ ப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக டூ ப்ளசிஸ் தலை, ஹசனின் காலில் பட்டு படு மோசமாக விபத்து ஏற்பட்டது. 

படுகாயமடைந்த டூ ப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் டூ ப்ளசிஸால் தொடர்ந்து ஆட முடியாமல் போனது. 

இந்நிலையில், டூ ப்ளசிஸுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமாக இருப்பதால் பிஎஸ்எல் (PSL) தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இன்று இரவு தென்னாப்பிரிக்கா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ட்வீட் செய்திருந்த டூப்ளசிஸ், எனக்காக அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. காயம் காரணமாக எனக்கு நினைவாற்றல் போனது. மிக விரைவில் விளையாட களத்திற்கு வருவேன் என நினைக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். 

பிஎஸ்எல் தொடரின் இந்த சீசனில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் அந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசியாக உள்ளது. தற்போது நட்சத்திர வீரர் டூப்ளசிஸ் விலகியிருப்பது அந்த அணிக்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்