“பாதி சீசன் முடிஞ்சிருச்சு”.. தோனி மீண்டும் CSK கேப்டனானது பற்றி டு பிளசிஸ் என்ன சொன்னார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து டு பிளசிஸ் முதல்முறையாக பேசியுள்ளார்.

“பாதி சீசன் முடிஞ்சிருச்சு”.. தோனி மீண்டும் CSK கேப்டனானது பற்றி டு பிளசிஸ் என்ன சொன்னார்..?

Also Read | RCB vs CSK: இன்னைக்கு நடக்கப்போற மேட்ச் தோனிக்கு ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..?

ஐபிஎல் தொடரின் இன்றைய (04.05.2022) 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ ஆகிய அணிகள் மோதவுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் டு பிளசிஸ் விளையாடியுள்ளார். இந்த சூழலில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் தோனியை எதிர்த்து பெங்களூரு அணியை டு பிளசிஸ் வழி நடத்த உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் ஜடேஜா மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. அதனால் மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பதாக ஜடேஜா தெரிவித்தார்.

இதனை அடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். அப்போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

 Faf du Plessis opens up on Dhoni returning as CSK captain

இந்த நிலையில் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக பதவியேற்றது குறித்து டு பிளசிஸ் பேசியுள்ளார். அதில், ‘இந்த சீசனின் தொடக்கத்தில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட சீசனின் பாதி போட்டிகள் முடிவடைந்த பின் மீண்டும் அவர் கேப்டன் பதவிக்கு திரும்பியது அதைவிட ஆச்சரியமாக உள்ளது’ என டு பிளசிஸ் கூறினார்.

மேலும் தோனி எதிராக கேப்டனாக செயல்பட உள்ளது குறித்து பேசிய அவர், ‘வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் எந்த ரகசியமும் இல்லை. தோனி கேப்டனாக இருப்பதால், சிறந்த வீரர்களை களமிறக்குவார் என்று நான் நினைக்கிறேன். இப்போட்டி சிஎஸ்கே அணிக்கு முக்கியமானது. எங்களுக்கு ஒரு பெரிய சவால் காத்துள்ளது. அதனால் நாங்கள் எச்சரிக்கையாக விளையாட வேண்டும்’ என டுபிளசிஸ் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, FAF DU PLESSIS, MS DHONI, CSK CAPTAIN, RCB CAPTAIN, சிஎஸ்கே, தோனி, டு பிளசிஸ்

மற்ற செய்திகள்