ஐயோ, 'கால்'ல அடிபட்டு 'ரத்தம்' வடியுது...! அத கொஞ்சம் கூட 'கேர்' பண்ணாம இப்படி 'வெறித்தனமா' ஆடுறாரு...! 'சிஸ்கே_வீரரின் டெடிக்கேஷன்...' - பதறும் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாலில் ரத்தம் வந்து கொண்டிருந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் பீல்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்திய சிஸ்கே அணி வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஐபிஎல் டி-20 தொடரின் நேற்று நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் அசுர பலத்தில் இருப்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு 5-வது பந்திலேயே ரன் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களிலும், கேப்டன் இயன் மோர்கன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதற்கு பின் களமிறங்கிய ராகுல் த்ரிபாட்டி நிதானமாக சென்னை அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு 45 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரியூ ரசல் 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் நிதானமாக விளையாடிய நிதிஷ் ராணா 37 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை அல்வா சாப்பிடுவது போல் அசால்ட்டாக வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை எட்டுவதற்காக சிஸ்கே வீரர்கள் ஆட்டம் முதலில் இருந்தே அதிரடியாக விளையாடி, கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ரசிகர்கள் இதயத் துடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்று சொல்லலாம். ஆனால், வழக்கம்போல் சென்னை அணியே போட்டியை வென்றது.
இந்த நிலையில், இந்த போட்டியில் காலில் ரத்தம் வடிந்துக் கொண்டிருந்ததை கூட கவனிக்காமல் சென்னை வீரர் டூ-பிளசிஸ், பீல்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்தினார் . அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக களம் இறங்கி பந்தை நாலாபக்கமும் சிதற விட்டார். அதிரடி ஆட்டத்தின் மூலம் 43 ரன்கள் குவித்து விக்கெட் ஆனார். கால் முட்டியில் இருந்து ரத்தம் வடிந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் சிறப்பாக விளையாடிய டூபிளசிஸை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Dedication @faf1307 😟🙏🏻#WhistlePodu | #IPL2021 pic.twitter.com/cS3oPtONnz
— CSK Fans Army™ 🦁 (@CSKFansArmy) September 26, 2021
மற்ற செய்திகள்