‘அவரோட பவுலிங்கை தெருவில் விளையாடும் குழந்தைங்க கூட ஈசியா அடிச்சிருவாங்க’!.. இந்திய பவுலரை ‘மோசமாக’ விமர்சித்த பாகிஸ்தான் வீரர்.. வெடித்த சர்ச்சை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை பாகிஸ்தான் வீரர் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 16-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும் குறிப்பாக ஒரு விக்கெட் கூட இழக்காமல் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற அற்புதமான பவுலர்கள் இருந்தும் ஒரு விக்கெட் கூட எடுக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் (Salman Butt), இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை (Varun Chakaravarthy) விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘வருண் சக்கரவர்த்தி ஒரு மிஸ்ட்ரி (Mystery) பவுலராக இருக்கலாம். ஆனால் அவரால் பாகிஸ்தான் வீரர்களை எந்த விதத்திலும் அச்சுறுத்த முடியவில்லை. பாகிஸ்தானில் தெருவில் விளையாடும் குழந்தைகள் கூட அவரின் பந்தை எளிதாக எதிர்கொள்வார்கள்’ என சல்மான் பட் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர், 33 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்