‘இப்படி பண்ணா எப்படி மறுபடியும் டீம்ல எடுப்பாங்க’.. ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்துல எடுக்காததுக்கு இதுதான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி எடுக்காததற்கான காரணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

‘இப்படி பண்ணா எப்படி மறுபடியும் டீம்ல எடுப்பாங்க’.. ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்துல எடுக்காததுக்கு இதுதான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் வீரர்..!

ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஆனால் 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இந்த ஏலத்தில் விலை போகாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை, இந்த ஏலத்தில் சிஎஸ்கே உட்பட எந்த அணியும் வாங்க முன்வராதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடி வந்தார். இவரை ரசிகர்கள் ‘மிஸ்டர் ஐபிஎல்’ என்றும், ‘சின்ன தல’ என்றும் அழைத்து வந்தனர். ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மோசமான பார்மிலும் சுரேஷ் ரெய்னா இருந்து வருகிறார்.

நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இருந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் பல வெற்றிகளில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். அதற்காகவாது அடிப்படை விலையில் அவரை எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை ஏன் வாங்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டௌல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து Cricbuzz ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘இதில் 2-3 பகுதிகள் அடங்கியுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில், சுரேஷ் ரெய்னா தனது விசுவாசத்தை இழந்தார். அதற்கான காரணம் குறித்து விரிவாக பேச தேவையில்லை. ஏன் அப்படி நடந்தது என்றும் பேச தேவையில்லை. அந்த தருணத்தில் அவர் தனது விசுவாசத்தை எதனால் இழந்தார் என்பதை யூகிக்க பல காரணங்கள் உள்ளது.

Ex-NZ player reveals big reason for CSK not buying Suresh Raina

இவை அனைத்தையும் விட அந்த தருணத்தில் தோனியிடமும், அணியிடமும், அவர் தனது விசுவாசத்தை இழந்தார். அதுபோன்ற ஒரு செயலை நீங்கள் செய்த பின்னர், பெரும்பாலும் உங்களை மீண்டும் மனதார யாரும் வரவேற்க மாட்டார்கள். அத்துடன் அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதுடன் ஷார்ட் பால் பந்துகளுக்கு பயப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் நீண்ட நாட்கள் விளையாடாத ரெய்னா, அதிலும் உடற்தகுதி இல்லாத அவருக்கு அடிப்படை விலை மிக அதிகம்.

அதனால் அவ்வளவு பணத்தை செலவு செய்ய யாராக இருந்தாலும் தயங்குவார்கள். அடிப்படை விலை மிக அதிகம். அவர், ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முதல் 8-9 ஆண்டுகளில் முன்னணியாக விளங்கியவர், தற்போது பார்மில் இல்லை என்றால் யார் அவ்வளவு ஏலத்திற்கு எடுப்பார்கள்’ என சைமன் டௌல் கூறியுள்ளார்.

Ex-NZ player reveals big reason for CSK not buying Suresh Raina

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக குடும்ப சூழல் காரணமாக திடீரென சுரேஷ் ரெய்னா விலகினார். அந்த சீசனில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல், புள்ளி பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தது. அந்த தொடரின் பாதியிலாவது சுரேஷ் ரெய்னா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் அந்த தொடரை புறக்கணித்து விட்டார்.

கடந்த ஆண்டும் காயம் காரணமாகவும், மோசமான பார்ம் காரணமாகவும் சுரேஷ் ரெய்னா சில போட்டிகளில் விளையாடாமல் உட்கார வைக்கப்பட்டார். தொடர்ந்து அதிருப்தியில் இருந்த சென்னை அணி நிர்வாகம், அவரது மோசமான ஃபார்மை காரணம் காட்டி ஏலத்தில் எடுக்கவில்லை என சைமன் டௌல் தெரிவித்துள்ளார்.

CSK, IPL, MSDHONI, SURESHRAINA, SIMON DOULL

மற்ற செய்திகள்