“IPL அம்பயருக்கு என்னதான் ஆச்சு?”.. விளாசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.. சர்ச்சையில் முடிந்த RCB vs LSG மேட்ச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் அம்பயர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

“IPL அம்பயருக்கு என்னதான் ஆச்சு?”.. விளாசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.. சர்ச்சையில் முடிந்த RCB vs LSG மேட்ச்..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதுல் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 96 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. நிதானாக ஆட்டத்தை தொடங்கி லக்னோ அணி, திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் லக்னோ அணி இருந்தது. அப்போது மார்கஸ் ஸ்டோனிஸும், ஜேசன் ஹோல்டரும் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை வீசிய ஜோஸ் ஹசில்வுட் முதல் பந்தை வைடாக வீசினார். ஆனால் அதற்கு அம்பயர் வைட் கொடுக்கவில்லை. அதனால் மார்கஸ் ஸ்டோனிஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.

இதனை அடுத்த பந்தை பேட்டிங் ஆட வைடு லைனில் நின்றார். இதை பயன்படுத்திக்கொண்ட ஜோஸ் ஹசில்வுட் ஸ்டம்ப்புக்கு நேராக வீசி ஸ்டோய்னிஸை போல்டாக்கி அனுப்பினார். இதனால் கடும் கோபத்துடன் மார்கஸ் ஸ்டோனிஸ் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ அணி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் அம்பயர் தவறான முடிவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அம்பயரை விமர்த்துள்ளார். அதில், ‘ஐபிஎல் அம்பயர்களுக்கு என்னதான் ஆச்சு? சிறிய தவறுகள் கூட போட்டியில் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதனை பார்க்கையில் பயமாக உள்ளது. பிசிசிஐ தகுதியான நபர்களை அம்பயர்களாக நியமிக்க வேண்டும். விரைவில் விழித்துக்கொள்ள வேண்டிய விஷயம். அம்பயர்களாக இருக்க தகுதியான நபர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்’ என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

IPL, RCBVLSG, UMPIRE, KRISHNAMACHARISRIKKANTH

மற்ற செய்திகள்