"'ஐபிஎல்' திருப்பி start ஆகுறப்போ, அவரால வர முடியலன்னா.. உங்க 'டீம்'க்கு தான் நல்லது.." 'ஆகாஷ் சோப்ரா' சொன்ன 'விஷயம்'.. ஒரு 'கேப்டன்'னு கூட பாக்காம இப்படியா சொல்றது??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வரும் நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடந்தால், இங்கிலாந்து அணி வீரர்கள் இடம்பெறுவது கடினம் தான் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்காக, தங்களது சர்வதேச போட்டிகளை இங்கிலாந்து வீரர்கள் தவிர்க்க மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர்கள் இடம்பெறாமல் போனால், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் அதிகம் சிரமப்படுவார்கள் என்றே தெரிகிறது. அதே போல, கொல்கத்தா அணியின் கேப்டனான இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனும் இடம்பெறாமல் போகலாம்.
இந்த சீசனில், இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள கொல்கத்தா அணி, இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் சிறந்த வீரர்கள் நிறைய பேர் இருந்த போதும், அந்த அணி அதிகம் தடுமாறி வருவதால், இயான் மோர்கனின் கேப்டன்சி கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது.
இந்நிலையில், மீதமுள்ள போட்டிகளை கொல்கத்தா அணி மோர்கன் இல்லாமல், சந்திக்கவுள்ளது பற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), 'கொல்கத்தா அணி தங்களது கேப்டன் மோர்கனை இழக்கும். ஆனால், அது ஒரு மோசமான காரியமா?. ஒரு கெட்ட விஷயத்தில் நிகழ்ந்த நல்லது என நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இந்த தொடரில் அவரது செயல்திறன் அவ்வளவு சிறப்பானதாக ஒன்றும்அமையவில்லை. அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்மைப் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
பொதுவாக, நீங்களாக அவரை மாற்ற விரும்பவில்லை. ஆனால், தற்செயலாக அது நிகழ்ந்து, ஒரு வீரர் இல்லாமல் போனால், அந்த அணியினர் வேறு மாற்றங்களை செய்தாக வேண்டும். இதனால், அவர்களால் நிச்சயம் சூழ்நிலையை கையாள முடியும்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ராஜஸ்தான் அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மற்றும் பட்லர் ஆகியோரும், சென்னை அணியில் சாம் குர்ரான் மற்றும் மொயின் அலி ஆகியோரும் இல்லாத காரணத்தால், மேற்கூறிய இரண்டு அணிகள் தான் இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல், அதிகம் பாதிப்பை சந்திக்கும் எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்