'ஏற்கெனவே நெலம ரொம்ப மோசமா இருக்கு... இப்போ இது வேறயா?.. சோலி முடிஞ்ச்... இந்திய அணி காட்டுல மழை தான்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்த இரு போட்டிகள் வரும் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புனேவிலேயே நடைபெறவுள்ளன.

'ஏற்கெனவே நெலம ரொம்ப மோசமா இருக்கு... இப்போ இது வேறயா?.. சோலி முடிஞ்ச்... இந்திய அணி காட்டுல மழை தான்'!

இந்நிலையில், கடந்த போட்டியின் இடையில் காயமடைந்த இங்கிலாந்து வீரர்கள் இயான் மார்கன் மற்றும் சாம் பில்லிங்ஸ் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான கடந்த போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தியா 317 ரன்களை அடித்தது. இங்கிலாந்தும் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை அடித்தது. ஆயினும் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த போட்டி சிறப்பானதாக இருந்தாலும் இரு அணியிலும் தலா இரு வீரர்கள் மோசமாக காயமடைந்துள்ளனர். 

இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மாவின் காயம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரை மட்டுமின்றி 'ஐபிஎல்'லையும் மிஸ் செய்யும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, இங்கிலாந்து அணியில் கேப்டன் இயான் மார்கன் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோருக்கும் நேற்றைய போட்டியின் இடையில் காயம் ஏற்பட்டது. இயான் மார்கனுக்கு விரல்களில் காயமேற்பட்ட நிலையில், அவருக்கு 4 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதேபோல பில்லிங்சுக்கு தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனினும், போட்டிக்கு இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் பொருத்திருந்து பார்க்கலாம் என கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார். மேலும், மேட் பார்கின்சன், ரீஸ் டோப்லே மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோருக்கு 2வது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்