இந்திய அணி மீது இப்படி ஒரு பகையா?.. "வாஷ் அவுட் செய்யணும்!".. வெறியோடு இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ரூட் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்திய அணி மீது இப்படி ஒரு பகையா?.. "வாஷ் அவுட் செய்யணும்!".. வெறியோடு இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி தலா ஒரு போட்டி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து டூர் அவருக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அதேசமயம், முதன் முதலாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. முதன்முறை கோப்பையை வெல்லப் போவது யார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக இரு அணிகளுமே தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. எனினும், இப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து ஆடுகிறது. இதன் முதல் போட்டி, லண்டனில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. 

இந்தியாவுடன் விளையாடுவதற்கு முன்பே, இதே இங்கிலாந்தில் அந்நாட்டுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து விளையாடுகிறது. இத்தொடர் முடிந்த அடுத்த நான்கே நாட்களில், இந்தியாவுடன் WTC இறுதிப் போட்டியில் மோதுகிறது. ஆகையால், நியூசிலாந்து சிறப்பான ஃபார்மோடு இந்தியாவை எதிர்கொள்ளும். மேலும், ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இத்தனை நாட்கள் வீட்டிலும், கடந்த 14 நாட்களாக மும்பை ஹோட்டலிலும் தனிமைப்படுத்திக் கொண்டு, இப்போது இங்கிலாந்திலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படும் இந்திய வீரர்கள், நேராக இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறார்கள். ஆகையால், நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு என்று பலர் கூறுகின்றனர். 

இந்த சூழலில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் ஆசை வேறு மாதிரியாக உள்ளது. அவர் 7 போட்டிகளையும் ஜெயிக்க வேண்டும் என்று கருதுகிறார். அதாவது, நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டி, இந்தியாவுக்கு எதிராக 5 போட்டி என்று அனைத்திலும் வெற்றிப் பெற்று, இரு அணிகளையும் ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என்கிறார். 

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில், இந்த வருடத்தின் இறுதியில் நடக்கும் ஆஷஸ் தொடரில் விளையாட செல்வதற்கு, இந்த 7 டெஸ்ட் போட்டிகளின் வெற்றி சிறப்பான விஷயமாக இருக்கும். இரு அணிகளையும் முழுமையாக வீழ்த்தி வெற்றிப் பெற்று செல்வதை விட, ஒரு சிறப்பான என்ட்ரி ஆஷஸ்க்கு கொடுக்க முடியாது. அப்போது வீரர்களும் பெரும் நம்பிக்கையோடு இருப்பார்கள் என்றார்.

 

மற்ற செய்திகள்