'என் முகத்துல முட்டைய தூக்கி வீசிட்டாங்க...' 'அதுக்காக எனக்கு ஃபீலிங்லாம் இல்ல...' - இப்படி சொல்றதுக்கு காரணம் 'இவரு' தான்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றதன் மூலம் என் முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இந்தியா இந்தத் தொடரின் முதல் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியை தழுவியதும் ‘இந்தியா இந்த தொடரை 0 - 4 என இழக்கும்’ என வாகன் சொல்லியிருந்தார்.
தற்போது இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில் வாகன் கூறியிருப்பதாவது “அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவியதும் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லும் என நான் சொல்லி இருந்தேன். இந்தியா இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் என் முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள் இந்திய வீரர்கள். இது அனைத்தும் நல்லதுக்குதான். நான் அதை எண்ணி வருந்தவும் இல்லை. சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் என இளம் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நான் சொன்னது தவறு என்பதில் எனக்கு துளி அளவும் வருத்தம் இல்லை” என வாகன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்