இப்டியே போனா 'வேடிக்கை' மட்டும் தான் பாக்க முடியும்... இடியாப்ப சிக்கலில் 'பிரபல' அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி தொடங்குகின்றன. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கவலை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மறுபுறம் கண்டிப்பாக இந்த வருடம் கப்பை வெல்ல வேண்டும் என, ஒவ்வொரு அணியின் வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அணியால் ஒன்றரை கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். வருகின்ற சம்மரில் இங்கிலாந்து அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. அதற்கு தயாராகும் பொருட்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக கிறிஸ் தெரிவித்துள்ளார்.
இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக தங்களது நாட்டு போட்டிகளை முடித்துக்கொண்டு வெளிநாட்டு வீரர்கள் தாமதமாகத்தான் ஐபிஎல் போட்டிகளில் இணைந்து கொள்வர். தற்போது தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி வருவதால் ஐபிஎல் அணிகள் மாற்று வீரர்களுக்கு என்ன செய்வது என தீவிர யோசனையில் ஈடுபட்டு வருகின்றன.