'மேட்ச்' ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி... சும்மா 'மாஸ்' காட்டிய 'இங்கிலாந்து', 'வெஸ்ட் இண்டீஸ்' அணி வீரர்கள்... நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் போட்டி தொடர்கள் பார்வையாளர்கள் இல்லாமல் தொடங்கியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் இருந்த இரு அணி வீரர்கள், நடுவர்கள், ஸ்டாஃப்கள் என அனைவரும் ‘Black Lives Matter’ இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவு தெரிவித்தனர். மேலும், இரு அணி வீரர்களும் தங்களது ‘Black Lives Matter’ லோகோ பொறித்த ஜெர்சியுடன் விளையாடினர்.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த மே மாதம், காவல்துறை அதிகாரி ஒருவரால் ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கறுப்பின இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக, அமெரிக்கா முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்தது. அனைத்து உலக நாடுகளும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்தது. தொடர்ந்து, ‘Black Lives Matter’ என்னும் இயக்கமாக மாறி உலகளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிக்கு தொடங்குவதற்கு முன்னர், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ந்து நடந்து வரும் இனவெறிக்கு எதிராக தங்கள் குரலை கொடுத்து போட்டியை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்