‘தலையில் அடி’.. சில நொடி எதுவும் பேசல.. உடனே வெளியேறிய வீரர்.. லார்ட்ஸ் டெஸ்ட்டில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் போது இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் ஃபில்டிங் செய்யும் போது கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாகடி கிராண்ட்ஹோம் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பவுண்டரிக்கு சென்ற பந்தை வேகமாக சென்று ஜேக் லீச் தடுக்க முயன்றார். அப்போது கீழே விழுந்ததில், அவருக்கு கழுத்து மற்றும் தலையில் அடிப்பட்டது. இதனை அடுத்து, மருத்தவ குழு உடனடியாக மைதானத்துக்கு வந்த ஜேக் லீச்சுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கன்கஷன் டெஸ்ட் நடத்தப்பட்டது. அப்போது ஜேக் லீச்சிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜேக் லீச் பதில் ஏதும் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக நின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அணி நிர்வகம், உடனடியாக அவரை மைதானத்தை விட்டு வெளியே அழைத்து சென்றது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘ஜேக் லீச் கீழே விழுந்த தாக்கம், அவருக்கு அதிகமாக இருப்பதாக உள்ளது. அதனால் அவருக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பாட்டிசன் களமிறக்கிறார். ஜேக் லீச் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார்’ என இங்கிலாந்து வாரியம் குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்