இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. என்னங்க ‘இவர்’ பேட்டிங் பண்ண வந்துருக்காரு..! செம ‘ட்விஸ்ட்’ வச்ச இந்தியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று (02.09.2021) ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.
இதில் ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா (11 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் 17 ரன்களில் அவுட்டானார். இந்த இக்கட்டான சமயத்தில் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். அதில் புஜாரா 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து ரஹானே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டுடன் மைதானத்துக்குள் வந்தார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஜடேஜா பொதுவாக 7-வது ஆர்டரில்தான் களமிறங்குவார். ஆனால் இப்போட்டியில் ரஹானே, ரிஷப் பந்துக்கு முன்னதாகவே ஜடேஜா களமிறக்கப்பட்டார்.
இதற்கு காரணம் ஒரு இடதுகை மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்கள் ஜோடி இருந்தால், பவுலர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும் என கேப்டன் கோலி முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது. இதில் இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அதிரடியாக அடித்து ஆடும் வீரர் என்பதால், நிதானமான ஒரு வீரர் வேண்டும் என ஜடேஜா களமிறக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த ஜோடி நீண்ட நேரத்துக்கு நிலைக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ் வீசிய 30 ஓவரில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா (10 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனால் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. தற்போது கேப்டன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரஹானேவும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி வருகின்றனர்.
The Wizard 🧙
Scorecard/Clips: https://t.co/Kh5KyTSOMS
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/PVlkIPGfI8
— England Cricket (@englandcricket) September 2, 2021
இந்த நிலையில் ஜடேஜாவை 5-வது வீரராக களமிறக்கியது யாருமே எதிர்பார்க்காத ஒன்று என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். அதேபோல் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்