'நியூசிலாந்து வீரரின் மனைவிக்கு வந்த இமெயில்'... 'இதுக்கு பின்னாடி இந்தியா தான் இருக்கு'... 'பரபரப்பை கிளப்பியுள்ள பாகிஸ்தான்'... அதற்கான காரணம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

'நியூசிலாந்து வீரரின் மனைவிக்கு வந்த இமெயில்'... 'இதுக்கு பின்னாடி இந்தியா தான் இருக்கு'... 'பரபரப்பை கிளப்பியுள்ள பாகிஸ்தான்'... அதற்கான காரணம்!

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் வந்திருந்தது. இந்த சூழ்நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் போட்டி ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Emails threatening NZ cricketers originated in India

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நியூசிலாந்து அணி தெரிவித்திருந்தது. இதைப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. 

கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு வந்த போதும், வருவதற்கு முன்னரும் நியூசிலாந்து வீரர்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலின் மனைவிக்கும் இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

Emails threatening NZ cricketers originated in India

இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாத் சவுதரி 'நியூசிலாந்து வீரர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இந்தியாவிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. விபிஎன் செயலில் மூலம் இந்த மின்னஞ்சல் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Emails threatening NZ cricketers originated in India

அந்த மின்னஞ்சலில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செல்லக்கூடாது. ஏனென்றால் அங்கு அவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்