IPL 2022: இப்ப இவருதான் overall பர்ப்பிள் CAP வின்னர்… CSK வீரர் படைத்த செம்ம சாதனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ ஐபிஎல் தொடரில் வியத்தகு சாதனை ஒன்றை நேற்றையப் போட்டியில் படைத்துள்ளார்.
‘தோல்விக்கு காரணம் இதுதான்’.. 2 வீரர்களை மறைமுகமாக சாடிய கேப்டன் ஜடேஜா.. யாருன்னு தெரியுதா..?
தொடர்ந்து இரண்டு தோல்வி…
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. சி எஸ் கே அணியின் ராபின் உத்தப்பா, ஷிவம் துபே மற்றும் மொயின் அலி ஆகியோரின் அதிரடியால் 210 ரன்கள் சேர்த்தது. ஆனால் பின்னர் களமிறங்கிய லக்னோ அணி இந்த இலக்கை கடைசி ஓவரில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனின் இரண்டாவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது சி எஸ் கே. இந்த தோல்வி ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தாலும், போட்டியில் முக்கியமான சாதனை ஒன்றை சி எஸ் கே வீரர் பிராவோ படைத்துள்ளார்.
பிராவோ படைத்த சாதனை…
இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர் டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய பிராவோ ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 153 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 171 விக்கெட்கள் எடுத்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை மும்பை, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்காக அவர் விளையாடி இருந்தாலும், சி எஸ் கே அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி சி எஸ் கே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
பிரோவோவுக்கு முன்னதாக இந்த சாதனையை லசித் மலிங்கா தக்கவைத்திருந்தார். 122 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தார்.
பிராவோ நெகிழ்ச்சி…
இந்த சாதனயைப் படைத்த பிறகு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘எப்போதும் எனக்கு கிடைத்து கிடைக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று எனக்கு தனிப்பட்ட முறையில் சிறந்த நாள். உலகின் கடினமாக டி 20 தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராகவும், மிகச்சிறந்த பவுலரான மலிங்காவின் சாதனையைக் கடந்தும் வந்துள்ளேன்.
இது 15 வருடங்களைக் கடந்த மிகப்பெரிய பயணம். ரசிகர்கள் என்னை மலிங்காவோடு ஒப்பிடுவார்கள். ஆனால் சந்தேகமே இல்லாமல் அவர் டி 20 கிரிக்கெட்டின் தன்னிகரற்ற பவுலர். மீதமுள்ள போட்டிகளில் கவனம் செலுத்தி அணியை வெற்றிப் பெறவைக்க முயற்சிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.
நேத்து மேட்ச்ல டபுள் சென்ச்சுரி போட்ட ‘தல’ தோனி.. எதுல தெரியுமா..?
மற்ற செய்திகள்