'சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்து'!.. டி20 தொடர்கள் மீது... டு ப்ளசிஸ்க்கு இவ்வளவு கோபம் ஏன்?.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல்வேறு நாடுகள் நடத்தும் டி20 லீக் தொடர்கள் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் டு ப்ளசிஸ் தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது.

'சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்து'!.. டி20 தொடர்கள் மீது... டு ப்ளசிஸ்க்கு இவ்வளவு கோபம் ஏன்?.. என்ன நடந்தது?

உலக அளவில் டி20 போட்டிகள் தனி கவனம் பெற்றுவருகின்றன. இந்தியாவுக்கு ஐபிஎல் போல, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் உள்நாட்டு டி20 லீக் தொடர்கள் பிரபலமாக உள்ளன. ஆனால், இவற்றால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளசிஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பல வருடங்களுக்கு முன்பு, ஆண்டுக்கு 2 டி20 லீக் தொடர்களே நடந்து வந்தது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் தொடர்கள் நடக்கின்றன. இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானது. மேலும், இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுக்கும் என்று டு ப்ளசிஸ் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், வெஸ்ட் இண்டீஸில்தான் முதல் முதலில் டி20 லீக் போட்டிகள் நடக்க ஆரம்பித்தது. அப்போது அந்நாட்டு வீரர்கள் உள்நாட்டு டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பல திறமையான வீரர்களை இழந்தது. இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இதே நிலைதான் நடக்கிறது என்று டு ப்ளசிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இப்போது டு ப்ளசிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக அமீரகம் சென்றுள்ளார். மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்