‘நம்மள விட பெரிய ரசிகரா இருப்பார் போலயே’.. தேசிய கீதத்தில் அந்த ‘வரி’ வரும்போது கரெக்ட்டா டிராவிட் பக்கம் திரும்பிய கேமரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

‘நம்மள விட பெரிய ரசிகரா இருப்பார் போலயே’.. தேசிய கீதத்தில் அந்த ‘வரி’ வரும்போது கரெக்ட்டா டிராவிட் பக்கம் திரும்பிய கேமரா..!

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று முன்தினம் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கருணாரத்னே 43 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Dravid appears on TV as Dravida Utkala Banga in National anthem plays

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 36.4 ஓவர்களில் 263 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் இளம் வீரர்கள் இஷான் கிஷன் 59 ரன்களும், பிரித்வி ஷா 43 ரன்களும் எடுத்து அசத்தினர். இப்போட்டியின் வெற்றி அடைந்ததன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்று வருகிறது.

Dravid appears on TV as Dravida Utkala Banga in National anthem plays

இப்போட்டி ஆரம்பிக்கும் முன், இரு நாட்டு அணிகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய நாட்டின் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தபோது, ‘திராவிட உத்கலா பங்கா’ என்ற வரி வந்தபோது, உடனே ராகுல் டிராவிட் டிவி-ல் காண்பிக்கப்பட்டார். இதனை கவனித்த ரசிகர்கள் திராவிட என வந்ததும் கேமராமேன் சரியாக டிராவிட்டை காட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Dravid appears on TV as Dravida Utkala Banga in National anthem plays

தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இங்கிலாந்தில் உள்ளார். இதற்கிடையே ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்