"அவரு இந்த தடவ ஐபிஎல் ஆடுறது டவுட்டு தான்"... முன்னாள் 'வீரர்' சொன்ன தகவலால்... ஷாக் மோடில் போன 'ஐபிஎல்' ரசிகர்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டரான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், அக்டோபர் மாதம் முதல் வாரம் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் (Monty Panesar) அவர் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், பென் ஸ்டோக்ஸின் தந்தை மூளை புற்றுநோய் மூலம் அவதிப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய ஸ்டோக்ஸ், நியூசிலாந்து கிளம்பிச் சென்றார். இந்நிலையில், அவரது தந்தையின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமில்லாமல் இருப்பதால் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் தான் என பனேசர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'அனைத்து திறமையுடன் விளங்கும் பென் ஸ்டோக்ஸ், கிரிக்கெட் சூப்பர்மேன் என்றே நான் கருதுகிறேன். அப்படி நிலைமை சீராகி, அவர் ராஜஸ்தான் அணிக்கு களமிறங்கும் பட்சத்தில் அவரது பங்கு, இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் களமிறங்காமல் போனால் கூட ராஜஸ்தான் ராயல்ஸ், 8 அணிகளில் ஆபத்தான அணியாக திகழும்' எனவும் பனேசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்