‘எல்லாம் ரெடி’!.. இந்தியாவில் இருந்து ‘ரெண்டே’ பேர் தான்.. கிரிக்கெட் ஜாம்பவானுடன் இங்கிலாந்துக்கு பறக்கும் தினேஷ் கார்த்திக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐசிசி நடத்தும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ள. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.
மேலும் இதே அணியே அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதற்கான 25 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளர்களாக இருவரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே போட்டியை வர்ணனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் முன்னணி வர்ணனையாளர்கள் சிலர் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். அதனால் இந்தியாவில் இருந்து சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மட்டுமே வர்ணனையாளர்களாக செல்ல உள்ளதாக Cricbuzz சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்