ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பல வருசமா சொதப்பிட்டு இருக்காரு.. பேசாம அவரை தூக்கிட்டு ‘ஸ்ரேயாஸ் ஐயர்’-க்கு வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானேவின் ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இப்போட்டிக்கு ரஹானே கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாக தனது பொறுப்பை சிறப்பாக செய்தாலும், பேட்டிங்கில் ரஹானே தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே ரஹானே எடுத்தார். அதனால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை எடுக்கவேண்டாம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அவர், தனது முதல் போட்டியிலேயே சதம் (105 ரன்கள்) மற்றும் அரைசதம் (65 ரன்கள்) அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் ரஹானேவின் ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். அதனால் ரஹானே அழுத்தத்தில் உள்ளார் என்றே நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன் ரஹானேவுக்கு ஒரு போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும். அவரை ஒரு போட்டியில் வெளியே உட்கார வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி ஸ்ரேயாஸ் ஐயரின் என் சொந்த ஊரான மும்பையில் நடைபெறுகிறது. அது அவருக்கு கூடுதல் சாதகமாக அமையும்.
ரஹானே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இது ஒன்றும் ஒன்று இரண்டு போட்டிகளில் அவர் ஒரு செய்யவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படிதான் விளையாடி வருகிறார். அதனால் அவரை நீக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்கலாம்’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்