அப்போ அந்த மேட்ச்ல ‘வலியோட’ தான் தினேஷ் கார்த்திக் விளையாடுனாரா.. TNCA செயலாளர் சொன்ன முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டியின் போது கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் காயத்துடன் விளையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பயன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த நிலையில், முன்னதாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டியின் போது தினேஷ் கார்த்திக்கு (Dinesh Karthik) காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் ஊசி செலுத்திக் கொண்டு தொடர்ந்து அவர் விளையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடருக்கு தினேஷ் கார்த்திக்கு பதிலாக விஜய் சங்கரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, ‘ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டியின்போது தினேஷ் கார்த்திக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஊசி செலுத்திக் கொண்டு விளையாடினார். காயம் இன்னும் சரியாகததால், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்