துளியும் ‘பயமில்லை’.. தீபாவளி ‘ஷாப்பிங்’.. ரங்கநாதன் தெருவில் அலைஅலையாய் வந்த மக்கள் வெள்ளம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் புது துணிகள் எடுக்க சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிகத்தில் பலரும் புது ஆடைகள், நகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். சென்னையின் பிரபல வணிக இடமான தியகராய நகர் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளதால் பலரும் ரங்கநாதன் தெருவில் குவிந்து வண்ணம் உள்ளனர். இதில் பலருக்கும் கொரோனா தொற்று குறித்த அச்சமோ, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமோ, முகக்கவசம் அணிவது குறித்த அக்கறையோ இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.
முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களைக் கடைக்குள் அனுமதிக்கக்கூடாது. கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கடைகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பலர் முககவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளிக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுபோல மக்கள் அலைஅலையாய் வருகின்றனர்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில் கூட்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அசம்பாவதிங்கள் நடக்காமல் இருக்க போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா போய்விட்டதாக எண்ணி அலட்சியமாக இருந்த பிரான்ஸ் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்நாட்டில் மீண்டும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்