"1000 கிமீ டிரைவிங் செஞ்சு வந்திருக்கோம்".. வைரலான RCB ரசிகரின் போஸ்டர்.. தினேஷ் கார்த்திக் கொடுத்த செம்ம ரிப்ளை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையான போட்டியில் ரசிகர் வைத்திருந்த போஸ்டருக்கு தினேஷ் கார்த்திக் அளித்த பதில் குறித்து தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. 

"1000 கிமீ டிரைவிங் செஞ்சு வந்திருக்கோம்".. வைரலான RCB ரசிகரின் போஸ்டர்.. தினேஷ் கார்த்திக் கொடுத்த செம்ம ரிப்ளை..!

Also Read |  IPL 2022: “நாங்க நல்லாதான் ஆரம்பிச்சோம்” “டி 20 போட்டியோட அழகே அதுதான்” – தோனி போல கூலாக பேசிய ஜடேஜா!

டெல்லி Vs பெங்களூரு

கடந்த மார்ச் 26 ஆம் துவங்கிய ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் 4 மைதானங்களில் மட்டுமே நடப்பு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Dinesh Karthik viral reply to the 1000 KM Drove poster of a fan

இதில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்

இதனை அடுத்து பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டுபிளேஸிஸ் - அனுஜ் ராவத் ஜோடி களத்திற்கு வந்தனர். ராவத் டக்கிலும், கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 8 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அதன் பிறகு வந்த விராட் கோலி 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் - சபாஷ் அஹ்மத் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

Dinesh Karthik viral reply to the 1000 KM Drove poster of a fan

இறுதிகட்டத்தில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியை வெளிக்காட்டினார். 34 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 66 ரன்களை குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். 20 ஓவர் முடிவில் 189 ரன்களை பெங்களூர் அணி எடுத்தது.

சேசிங்

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் வார்னர் (66) தவிர அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து டெல்லி அணி 173 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

போஸ்டர்

இந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் "ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து இந்த போட்டியை காண வந்துள்ளதாகவும் ஈஸாலா கப் நம்தே (EE SALA CUP NAMDE)" எனவும் எழுதிய போஸ்டரை வைத்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக் "அவர்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்து இருக்கும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Dinesh Karthik viral reply to the 1000 KM Drove poster of a fan

ரசிகரின் போஸ்டருக்கு தினேஷ் கார்த்திக் அளித்த பதில் குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Also Read | “இப்போ இந்த பொருளுக்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி”.. மணமகனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்..!

CRICKET, IPL, IPL 2022, DINESH KARTHIK, 1000 KM DROVE POSTER, FANS, RCB VS DC

மற்ற செய்திகள்