Video: இந்த 3 கேப்டன்களுக்கும்.... ரொம்ப மோசமான ஒரு 'ஒற்றுமை' இருக்கு... என்னன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் தற்போது லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. அனைத்து அணிகளும் 1 வெற்றியுடன் இருக்க டெல்லி அணி 2 வெற்றிகளை ருசித்துள்ளது. அதே நேரம் தனிப்பட்ட முறையில் கேப்டன்களின் மோசமான ரெக்கார்டும் ரசிகர்களால் வெளிச்சம் போட்டு காண்பிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மோசமான முறையில் அவுட் ஆனார். அதாவது அவர் ரன் எதுவும் எடுக்காமல் இருக்கும் போது அவுட் ஆனார். எனினும் கேப்டனாக தினேஷ் கார்த்திக் டிஆர்எஸ் கேட்க, டிஆர்எஸ் முறையிலும் அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது.
மேலும் டிஆர்எஸ் கேட்கப்படுவதற்கான காலம் தாண்டி தினேஷ் டிஆர்எஸ் கேட்க, அதை அம்பயரும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டது குறித்தும் ட்விட்டரில் தாளித்தனர்.
அந்த வகையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்வின் ஆகியோருடன் மோசமான சாதனை ஒன்றை தினேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி டிஆர்எஸ் முறையிலும் அது அவுட் என நிரூபணம் செய்யப்பட்டதே அந்த மோசமான சாதனை ஆகும்.
ரோஹித் 2018-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும், அஸ்வின் 2018-ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் , தினேஷ் கார்த்திகே நேற்று (2020) அபுதாபியில் நடைபெற்ற போட்டியிலும் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
— faceplatter49 (@faceplatter49) September 26, 2020
@DineshKarthik @KKRiders Are You A Captain Or What
After DRS Time Out you people taking the review
Even Umpire also cheking on KKR review only No Ethics in Cricket only😓😓@ICC @BCCI @IPL @StarSportsIndia @SGanguly99 @ShuklaRajiv
— Koushik B (@KoushikB17) September 26, 2020
Captains dismissed for Duck while using DRS in IPL:
Rohit Sharma v RCB, 2018 Bengaluru
Ravi Ashwin v CSK, 2018 Pune
Dinesh Karthik v SRH, 2020 Abu Dhabi*#SRHvsKKR #SRHvKKR
— Ayush Bharadi (@AyushB45) September 26, 2020
மற்ற செய்திகள்