‘அதை வச்சு அவரை குறைச்சு மதிப்பிடாதீங்க’!.. பேட் கம்மின்ஸே புகழ்ந்து பேசிருக்காரு.. இந்திய வீரருக்கு ஆதரவாக ‘குரல்’ கொடுத்த தினேஷ் கார்த்திக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள புஜாராவுக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

‘அதை வச்சு அவரை குறைச்சு மதிப்பிடாதீங்க’!.. பேட் கம்மின்ஸே புகழ்ந்து பேசிருக்காரு.. இந்திய வீரருக்கு ஆதரவாக ‘குரல்’ கொடுத்த தினேஷ் கார்த்திக்..!

ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (18.06.2021) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் ப்ளேயிங் லெவன் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது.

Dinesh Karthik says Pujara wins matches for India

அதேபோல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வர்ணனையாளர்களாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கும் சென்றுள்ளனர். இந்த நிலையில் Star Sports சேனலுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக், இந்திய வீரர் புஜாரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

Dinesh Karthik says Pujara wins matches for India

அதில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேனின் ஸ்ட்ரைக் ரேட்டை குறிப்பிட்டு அவரை விமர்சனம் செய்வது முட்டாள்தனமான ஒன்று. கடந்த சில ஆண்டுகளாகவே 80-82 சதவீத டெஸ்ட் போட்டிகள் நான்கே நாட்களில் முடிந்துள்ளன. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவரின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலைப்படுகிறீர்கள். இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரும் நோக்கத்தில் புஜாரா விளையாடி வருகிறார். அதனால் அவர் எந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட விரும்புகிறாரோ அதிலேயே அவர் விளையாடட்டும்’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Dinesh Karthik says Pujara wins matches for India

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. அப்போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது. அப்போது புஜாரா ஆடிய பொறுப்பான ஆட்டத்தால், போட்டி டிராவில் முடிந்தது.

Dinesh Karthik says Pujara wins matches for India

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், ‘இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பேட் கம்மின்ஸ் என்னிடம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடர் குறித்து பேசினார். அப்போது புஜாராவின் ஆட்டத்தைப் பற்றி புகழ்ந்து பேசியிருந்தார். அந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற எல்லா சூழ்நிலையும் சாதகமாக இருந்தது. ஆனால் அப்போட்டி டிராவில் முடிந்ததற்கு புஜாராவின் ஆட்டம்தான் காரணம். அவர் மட்டும்தான் அந்த போட்டியின் முடிவை மாற்றினார் என்று கூறினார்’ என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில், தினேஷ் கார்த்திக்கும், பேட் கம்மின்ஸும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்