'யார் யாரோ என்னை திட்டுறாங்க!.. எத எடுத்தாலும் குறை சொல்றாங்க!'.. சொல்லப்படாத கருப்பு பக்கங்கள்!.. நொறுங்கிப் போன தினேஷ் கார்த்திக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது பல மோசமான அவமானங்களை சந்தித்ததாக தினேஷ் கார்த்திக் மனம் உருகியுள்ளார்.
2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். பின்னர் கமெண்டேட்டர் அவதாரமும் எடுத்தார்.
கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டார். இந்திய அணியிலிருந்து ஓய்வு அறிவிக்கும் முன்பே, தினேஷ் கார்த்திக் வர்ணனை பணி செய்ததால், இவரது கமெண்ட்ரியைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆட்டத்தின் வானிலை நிலவரம் முதல் சக வர்ணனையாளரை கலாய்ப்பது வரை தினேஷ் கார்த்திக்கின் கமெண்ட்ரி ரசிகர்களிடம் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைதளங்களிலும் இவரது கமெண்ட்ரி குறித்து ரசிகர்கள் விவாதித்து வந்தனர். இதனால் இவருக்கு இங்கிலாந்து - இலங்கை தொடரில் வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நிறைய அவதூறுகளை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "வானிலை குறித்த தகவலை வெளியிடுவதில் ரிஸ்க்-ம் உள்ளது என்பதை புரிந்துக்கொண்டேன். எனது வானிலை அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் முதல் நாள் பாராட்டினர், 2வது நாள் மகிழ்ந்தனர். ஆனால், 3வது நாள் முதல் மோசமாக திட்ட தொடங்கிவிட்டனர். என்னால் தினமும் வானிலை அப்டேட் தருவதற்காக காலை 6 மணிக்கு எழ முடியவில்லை. நான் தூங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
இதைக் கண்ட அவர்கள், சமூக வலைதளங்களில் என்னை மோசமாக பேசத்தொடங்கினர். "இன்னும் என்ன தூக்கம் வேண்டும் உனக்கு?" போன்ற மிக மோசமான வார்த்தைகளில் திட்டினர். அதன் பின்னர் மழை பொழிகிறது என்று கூறுவதற்கு அவர்கள் என்னை விமர்சனம் செய்தனர். அவர்கள் விரும்புவதை நான் சொல்லவில்லை என்றால் விமர்சனம் செய்கின்றனர். கமெண்டேட்டர் பயணத்தில் இதுவும் இருக்கும் என்பதை தெரிந்துக்கொண்டேன்" என உருக்கமாக கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்