‘சிஎஸ்கே என்னை டீம்ல எடுப்பாங்கன்னு நினைச்சேன்’.. ‘தோனி என் பக்கத்துலதான் இருந்தாரு’.. சீக்ரெட் உடைத்த தினேஷ் கார்த்திக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணி தோனியை கேப்டன் என அறிவித்ததும் என் இதயமே நின்றதுபோல ஆகிவிட்டது என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

‘சிஎஸ்கே என்னை டீம்ல எடுப்பாங்கன்னு நினைச்சேன்’.. ‘தோனி என் பக்கத்துலதான் இருந்தாரு’.. சீக்ரெட் உடைத்த தினேஷ் கார்த்திக்..!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் முன்னணி வீரராக உள்ளார். பல முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றி வழி வகுத்தார். இது இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் சார்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் கிடைக்காதது குறித்து கிரிக்பஸ் (Cricbuzz) இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதில், ‘2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது நான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தேன். தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரைதான் சிஎஸ்கே அணி தேர்ந்தெடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அது நானாக இருக்ககூடும் என நினைத்து இருந்தேன். நிச்சயம் என்னை அணியில் சேர்ப்பார்கள் என நினைத்தேன்.

ஆனால் கேப்டனாக என்னை நியமிப்பார்களா என்ற கேள்வி மட்டும் என்னுள் எழுந்துகொண்டே இருந்தது. அப்போது சிஎஸ்கே தோனியை கேப்டனாக நியமித்த செய்தி வெளியானது. அந்த சமயம் தோனி என் அருகில்தான் இருந்தார். ஆனால் தன்னை சிஎஸ்கே அணியில் சேர்க்கப்போகிறார்கள் என அவரும் சொல்லவில்லை. ஒருவேளை அது அவருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த செய்தியை கேட்ட பின் என் இதயமே நின்றதுபோல் இருந்தது. பின்னர் அணியிலாவது எடுப்பார்கள் என நினைத்தேன். 13 வருடங்களாக சிஎஸ்கே அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.